மனித சந்தை

இடம்: மணீஷ் திரை அரங்கம் அருகில், ஹோப் காலேஜ், கோவை

அரபு நாடுகளுக்கு
அடிமைகளாய் போனபின்பும்,
மலிவாக இங்கே
மனித வளம்.

மண்வெட்டி,
கடப்பாரை,
மட்டை கோல்கள் சகிதம்
மனித சந்தை.

மந்தைகளாய் எங்கும்
மனிதக் கூட்டம்.
விற்பனை பொருளாய்
வீதியிலே.

தூக்குப் போசிகளில்
நேற்றய மிச்சங்களுடன்,
நாளய இரையை
தேடும் பறவைகளாய்.

அதிகார மேஸ்திரிகளின்
அழைப்பிற்கு காத்திருக்கும்,
முன்தினம் அடித்த சரக்கால்
சிவந்த விழிகள்.

கொத்துக் கொத்தாய்
சித்தாள் கூட்டம்.
வாடி வதங்கிய மலர்களும்
வந்து நிற்கும் ஆங்காங்கே.

மாட மாளிகைகள்
கட்டும் மக்கள்
அன்னாடங் காய்ச்சிகளாய்!
வறுமையின் சாட்சிகளாய்!
கட்டும் கட்டடங்கள்
உயரே போனாலும்,
வாழ்க்கை எப்பொழுதும்
வறுமைகோட்டிற்கு கீழேதான்.

எழுதியவர் : CHOKKALINGAM (16-Sep-16, 2:04 pm)
சேர்த்தது : ப சொக்கலிங்கம்
Tanglish : manitha santhai
பார்வை : 82

மேலே