தந்தை பெரியாருக்கு

சாதியை அழித்த சாமி
சமதர்மம் உரைத்த சாமி
சாக்கடை சமுதாயத்தை
சரிசெய்த ராமசாமி

நீதியைச் சொன்ன சாமி
நேர்வழிச் சென்ற சாமி
நிலையற்ற கூனினத்தை
நிமிர்ந்துநில் என்ற சாமி

ஆத்திகம் ஒழித்த சாமி
அறிவொளியான சாமி
அறமற்ற அநியாயத்தை
ஆழத்தில் புதைத்த சாமி

மதங்களை மாய்த்த சாமி
மானுடம் காத்த சாமி
மடங்கிப்போனோர் முதுகெலும்பை
நிமிர்த்திய ராமசாமி

முகமூடி கிழித்த சாமி
மூடத்தை எரித்த சாமி
மூடர்கள் மூளை துவைக்க
மூதறிவு பெற்ற சாமி

தொண்டுசெய்ய பிறந்த சாமி
தூயத்தாடி வளர்ந்த சாமி
பேரறிவு பெற்ற சாமி
பெரியாரென்ற ராமசாமி.

இன்று பிறந்த தந்தை பெரியாரை நெஞ்சில் தாங்கி நிற்போம்.

===தருவி- நிலாசூரியன்.

எழுதியவர் : தருவி- நிலாசூரியன் (17-Sep-16, 4:16 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 108

மேலே