வெண்பா கவி 1
வான வெளியில் வனங்கள் அமைத்ததும்
கானக் குயிலாய் பறக்கின்றாள் - தினமொரு
மேக இடுக்கில் நுழைந்து அமர்ந்ததால்
மோகம் இழைக்கும் மலர்!
-இருவிகற்ப நேரிசை வெண்பா!
(இதில் தவறிருந்தால் தெரிவிக்கவும்!
இது என் முதல் வெண்பா கவி! எனக்கு
கொஞ்சம் தான் தெரியும் யாப்பு! தவறு
தெரிந்தால் சொல்லுங்கள்!எந்த தவறென்றும்!