என் தமிழ் அன்னையே

உனக்கு நிகர் இனியமொழி ஏது என்றான் பாரதி..
உன்னை அமுதென்று பாடினான் பாரதிதாசன்..
பிறகேன் உனக்கு இந்த அவலநிலை..?
சங்கங்கள் வளர்த்த பிள்ளை நீ..
உனக்கா இந்த சங்கடம்..?

உனக்காக ஜோசப்பெஸ்கி வீரமாமுனியானான்..
இறந்தபின்னும் ஜி.யு.போப் உன் மாணவனான்..
நாங்களோ உனக்குச் சனியானோம்-உனக்கு
இரண்டாயிரம் வயதானதால்...அனாதையில்லத்தில்
சேர்த்திட்டோம்.

நாங்கள்..
ஒன்றைப்போல் நிமிர்ந்து நில்லாமல்..
ஐந்தைப்போல் கூனிகுறுகி நிற்பதால்..
நீயும் குறுகிப்போனாய்.

எழுதியவர் : பா.சிவச்சந்திரன் (18-Sep-16, 5:40 pm)
சேர்த்தது : சிவச்சந்திரன்
Tanglish : en thamizh annaiyae
பார்வை : 221

மேலே