மீனாட்சி வெண்பா 1
தென்றலும் தென்பொதிகைச் சாரலும் வீசிடும்
பொன்மதுரை வீதியில் பூங்கதம் பம்மணக்கும்
அங்கயற் கண்ணியும் சொக்க னுடனமரும்
மங்காத கூடல் நகர் .
கூடல்மா நன்னகர் கோபுரம் வான்தொடும்
கூந்தலில் பெண்சூடும் பூமலர் தேன்சிந்தும்
காதல் கயல்விரியும் மீனாள் அழகினில்
காதலில் சொக்குவான்சொக் கன் .
சொக்கனும் ஊர்வலம் வந்தனன் வீதியில்
சொக்கி மலர்ந்தாள் மகிழ்ந்தனள் காதலில்
தக்கார் குறித்தநா ளில்கை பிடித்தனன்
மிக்க புகழ்மதுரை யில் .
-----கவின் சாரலன்
தொடரும்