மீனாட்சி வெண்பா 2
மிக்க புகழ்மதுரை மாடத்தில் மீன்பறக்கும்
நக்கீரன் நற்றமிழ் வீதி யினில் ஒலிக்கும்
சொக்கனும் சொக்கியும் நின்றா டிடுவரே
தக்க திமிதாவென் றே .
வென்றேவா ழும்கயல் போரிலும் காதலிலும்
என்றும் சிரிக்கும்நல் முத்திதழில் கீழ்க்கடலில்
மன்றம் பொலிந்து தமிழ்வாழும் மாநகரில்
நன்றே தருவாள்மீ னாள்
தருவாள்மீ னாள்நலம் எல்லாமும் நாளும்
அருள்வாள் தனம்கல்வி யும்புகழும் என்றும்
வருவாள் மகிழ்ந்தே தமிழ்த்தேன்நல் வாழ்த்தில்
பொருளாய்நற் சொல்லமு தாய் .
----கவின் சாரலன்
தொடரும்