இன்பம் பேரின்பம்
அனுபவங்களை அசைபோடுவது இன்பம்
ஆதவன் கதிரில் காய்வது இன்பம்
இயற்கையின் எழிலை காண்பது இன்பம்
ஈன்றவள் சேய்யுடன் இருப்பது இன்பம்
உயிர்களின் அமைதியைக் காப்பது இன்பம்
ஊருடன் சேர்ந்து உண்பது இன்பம்
எளிமையை கற்று வாழ்வது இன்பம்
ஏழைகள் சிறப்புடன் வளர்வது இன்பம்
ஐயம் தெளிய கற்பது இன்பம்
ஒருவரையும் குறையின்றி பார்ப்பது இன்பம்
ஓரிடத்தில் நிற்காமல் உழைப்பது இன்பம்
ஒளவையின் சொற்படி இருப்பது இன்பம்
அனைவரும் வாழ தான் உழைப்பது இன்பம்
இவை அணைத்தையும் வழங்கிய
பரம்பொருளை வணங்குவது பேரின்பம்....