குழந்தை நட்சத்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வானில் இருக்கும் அந்த நட்சத்திரங்களை
விட
இந்த மண்ணில் இருக்கும் குழந்தை
நச்சத்திரங்கள் மக்களை கவர்ந்ததோ
இன்று இனியும் ........
சிறு சிறு பட்டாம் பூச்சிகள்
சிலிர்க்க வைக்கிறது தன்
சீரிய சிறந்த நடிப்பால் .............
குட்டி குட்டி நட்சத்திரங்கள்
குடும்பத்தை குழுவாக ஒன்றிணைத்து
சிரிக்க வைக்கிறது
சிந்திக்கவைக்கிறது ...........
கண்ணீர் சிந்த வைக்கிறது
முதல் முறையாக இந்த
அழகு ரோஜாக்கள் சீறிய
கருத்தால் ...........
பிஞ்சு வயதிலேயே தன்
பீடு நடையால்
பல சமூக சீர்கேடுகளை
மக்கள் மனதில் இருந்து அழிக்க
மாசற்ற மனம் அது நடிக்கிறது
பொருள் அறியாமலே .................
இன்று
இவர்கள் ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும்
என் மகள்
என் மகன் என உறவு கூறி
கொண்டாப்படும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் !