நபியின் நகைச்சுவை - 01
ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனம் செல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என்றார்.
நபி (ஸல்) அவர்கள் கேலியாக, "இன்னாரின் தாயே! கிழவிகள் சுவனம் புகமாட்டார்கள்'' என்றார்கள்.
அம்மூதாட்டி அழுதவளாக திரும்பிச் சென்றாள்.
நபி (ஸல்) அவர்கள், "அவள் கிழவியாக இருக்கும் நிலையில் சுவனம் செல்லமாட்டாள் என்பதை அவளிடம் தெரிவித்து விடுங்கள்!'' என்று கூறினார்கள்.
பின்பு பின்வரும் இறைவசனத்தை ஒதிக் காட்டினார்கள்: "நிச்சயமாக நாம் அவர்களைப் புதிதாகவே படைத்திருக்கின்றோம். இன்னும் நாம் அவர்களைக் கன்னியர்களாகவே ஆக்கியிருக்கின்றோம்'
(அல்குர்அன் 56:35,36). (ஸன்னனுத் திர்மிதி)