சூது என்று சூது செய்யாதே என்கிறார் நம்மாழ்வார்
நன்றி: என்.சொக்கன்.
_____________________
அதென்ன ரெட்டைச்சூது என்று அகரமுதலியைப் புரட்டினேன். 'சூது' என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருளும் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்.
ஆக, 'சூது என்று சூது செய்யாதே' என்றால், வெற்றி பெறலாம் என்றெண்ணிச் சூதாடாதே என்று பொருள். இதைத் திருவள்ளுவரும் சொல்கிறார்:
வேண்டற்க, வென்றிடினும் சூதினை. வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கியற்று.
சூதாட்டத்தில் வென்றாலும் பரவாயில்லை, அந்த ஆட்டத்தில் ஈடுபடாதீர்கள். அதில் நீங்கள் பெறும் வெற்றி, தூண்டிலில் இருக்கும் உணவை உண்ட மீனின் வெற்றியைப்போலதான்.
தூண்டிற்பொன்: என்ன அழகான சொல். இங்கே பொன் என்பது தங்கம் அல்ல, இரும்புதான். பொன் என்றால் இரும்பு என்ற பொருளும் உண்டு.