கேரளா பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேணாம்
பெண்மணி 1:- கேரளா பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேணாமுன்னு என் பையன்கிட்ட தலை தலையா அடிச்சிக்கிட்டேன், அவன் கேக்கல... இப்ப நான் கிடந்து அல்லோலப்படறேன்!
பெண்மணி 2:- ஏன் என்னாச்சு...? சின்ன பிரச்சனைன்னா கூட 'வேலை நிறுத்தம், போராட்டம்'னு கொடி பிடிக்கறாளா...?
பெண்மணி 1:- அப்படி ஏதாச்சுமுன்னா கூட நான் சமாளிச்சிடுவேனே...!
பெண்மணி 2:- அதுக்கும் மேல அப்படி என்ன பண்ணிட்டா...?
பெண்மணி 1:- அது வேறொண்ணுமில்ல..., மொழி தெரியாதனால என்னால இதுவரை ஒரு சண்டைல கூட அவளுக்கு சாிசமமா நின்னு ஜெயிக்க முடியல... அதான்!
பெண்மணி 2:-?