சொன்னேன், கேட்டீங்களா

முதலாளி:- புதுசா வேலைக்கு சேர்ந்த பையனை கொஞ்ச நாளைக்கு சமையல் கட்டுக்குள்ள அனுப்ப வேணாம்..., மேஜை மட்டும் துடைக்க வச்சா போதுமுன்னு சொன்னேன், கேட்டீங்களா..?

ஊழியர்:- இப்ப என்ன ஆச்சுங்க முதலாளி..?

முதலாளி:- மூச்சுப் பிடிச்சு வேலை செய்து, மூர்ச்சையாகி கிடக்கறான்...!

ஊழியர்:- மூச்சு பிடித்து வேலை செய்யற அளவுக்கு நம்ம கடைல அப்படி என்ன வேலை இருக்கு..?

முதலாளி:- ஒருத்தர் "தம் பிரியாணி" ஆர்டர் பண்ணதை தப்பா புரிஞ்சுக்கிட்டு, மூச்சை "தம்" கட்டி நின்னு, எடுக்க முயற்சித்ததுல மூர்ச்சையாகி விழுந்திட்டான்!

ஊழியர்:-?

எழுதியவர் : செல்வமணி (19-Sep-16, 9:13 pm)
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே