அம்மா
அம்மா
எனக்கொரு அன்புத் தாயிருக்கா
அவள விட்ட எனக்கு வேற யாரிருக்கா
நல்லது-கெட்டது சொல்ல
உலகத்துல ஆயிரம் இருக்கா
எனக்கு நல்லது மட்டுமே செய்ய
அவள் ஒருத்தி மட்டுமே இருக்கா
ரொம்ப நாள் வாழ ஆசையில்ல
அவள் இல்லாத வாழ்வு தேவையில்ல
அடுத்த ஜென்மம்னு ஒன்னு வேணா
இந்த ஜென்மத்துல இவள பிரிய வேணா
கடவுள்ட நான் எப்பவும் கேக்குறது
இத மட்டும் தா
எனக்கு சேர்த்து வேண்டுறவ என்
தாயி மட்டும் தா