படைத்தவன் தயக்கம்

படைத்தவன் தாமதித்து விட்டான் முடிவெடுக்க

எங்களைப் எப்படி படைப்பதென்று

படைப்பில் ஏற்பட்ட குழப்பம்

பரிதாபத்திற்க்குரியவர்களாய் நாங்கள்

படைத்தவன் வாய் மூடி மௌனியானான்

தன் தவறை உனர்ந்து

எங்கோ நடந்த தவறுக்கு

பலிகடாவாக நாங்கள்,

பட்டத் துன்பம் கொஞ்சமல்ல நஞ்சமல்ல

பெற்றவர்களுக்கு அவமான சின்னமாய்

சுற்றியுள்ளவர்களுக்கு வேடிக்கை பொருளாய்

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாய்

வயிற்றுபாட்டுக்கு கையேந்துபவர்களாய்

இப்படி இன்னும் நீண்ட பட்டியலுக்கு

சொந்தக்காரர்களாய் நாங்கள்!

என்னுடைய இந்த முயற்ச்சி

எங்கள் அனைவரது வாழ்கைக்கும்

முன்னுதாரணமாகட்டும்

உங்கள் ஆதரவை தந்திடுங்கள்

நாங்களும் சகமனிதர் போல் வாழ.
#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (20-Sep-16, 1:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே