ராணி 01
காலைக் கதிரவன் தூக்கத்திலிருந்து விளிக்கத் தொடங்கிய நேரம். தெருமுனையில் கூட்டம் கூட்டமாக மக்கள்,அவர்களுக்கு நடுவே சில காக்கி உடையணிந்த காவலர்கள் ஒரு பிணத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். இந்த ஏரியாவில் இந்த மாதத்தில் நடந்த மூன்றாவது கொலை. கொலை செய்யபட்ட மூவருமே அரசியல் பின்புலம் கொண்டவர்கள்.அதற்கும் மேல் மூவருமே காவல்துறையை சேர்ந்தவர்கள்.இந்த தொடர்கொலைக்கு பின்னிருக்கும் மர்மத்தை போலீஸால் யூகிக்க கூட முடியவில்லை.ஆனால் பத்திரிக்கை சந்திப்பில் குற்றவாளியை நெருங்கி விட்டோம் என பேட்டி மட்டும் தவறாமல் வந்துவிடும்.
கொலையான மூவருக்குமுள்ள ஒரே தொடர்பு "மூவரும் இணைந்து ஒரு கற்பழிப்பு வழக்கை விசாரணை செய்தது". அவர்களின் விசாரணை கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு எதிராக இருந்தது.மேலும் அந்த பெண்ணின் மீது இரண்டு விபச்சார வழக்கும் போடப்பட்டது.காரணம் கற்பழிப்பு வழக்கு போடப்பட்டது தொழிலதிபர் B.B.ராவின் மகன் புனித் ராவ் மீது.எனவே ராவின் பணபலத்திற்கு காவல்துறை அதிகாரிகள் மடிந்தனர்.
ஆனால் இந்த சம்பவத்திற்கும் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென காவல்துறை நம்பியது.ஏனெனில் கற்பழிக்கப்பட்ட பெண் அனாதை,அவளால் தனியாளாக கொலைசெய்திருக்க முடியாது. இறந்த மூவருக்கும் பகையாளிகள் அதிகம் கிடையாது.பின் யார் தான் இந்த தொடர்கொலைகளை செய்தது.
காவல்துறை மண்டையை பிய்த்துக் கொண்டு விசாரணை செய்தது.
போலீஸ் கொலை நடந்த இடத்தைச் சுற்றி வளைத்து விசாரணை செய்தது. அப்போது கொலையை நேரில் பார்த்ததாக ஒரு பெண் கூறினாள். கொலை நடந்தது அவள் வீட்டு பின்பறத்தில் தான். அவளின் பெயர் ராணி.அவள் தான் இறந்த மூவரால் விபச்சாரி என நிரூபிக்கப்பட்டவள்.
அவளின் வாக்குமூலம் மிகவும் சரியான நேரத்தில் காவல் துறைக்கு கிடத்தது.அவள் கூறிய அடையாளத்தைக் கொண்டு ஒரு மாதிரிப் படம் வரையப்பட்டது.அந்த படத்திலிருந்தது புனித் ராவின் முகம்.காவல் துறை அவளின் வாக்குமூலத்தை நம்ப மறுத்தது. முன்பகையின் காரணமாக புனித்தை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறாள் என அவளை கண்டித்தது.
மீண்டும் குழப்பத்தில் மூழ்கியது காவல்துறை.அன்று இரவு புனித்தின் சடலம் ஒரு மேம்பாலத்தில் கண்டெடுக்கப் பட்டது.அங்கு சென்ற காவல்துறைக்கு நம்ப முடியாத தகவல் கிடைத்தது.புனித்தின் கைபேசியில் இருந்த வீடியோவில் புனித் "மூன்று காவல்துறை அதிகாரிகள் கொலைக்கும் நான் தான் காரணம்.அந்த மூவரும் என்னை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தனர்.சில மாதங்களுக்கு முன் ராணி என்ற பெண்ணை நான் கற்பழித்தேன்.அந்த வழக்கிலிருந்து விடுபட கொலைசெய்யபட்ட மூவரும் எனக்கு உதவினர்.அதனை காரணம் காட்டி என்னிடம் பணம் பறித்தனர்.இதிலிருந்து விடுபட எனக்கு வேறு வழி தெரியவில்லை.அதனால் தான் அவர்களைக் கொலை செய்தேன்.ஆனால் கொலை செய்தபின் தான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று தெரிந்தது.இதிலிருந்து விடுபட தற்கொலையை தவிற வேறு வழியில்லை" என பதிவாகியிருந்தது.
காவல்துறை முழுமனதின்றி இந்த வழக்கை மூடியது. சில மாதங்களுக்குப் பிறகு ராணி அவசர அவசரமாக எங்கோ கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
அப்போது ஒரு போன் வந்தது. ராணி போனை எடுத்து காதில் வைத்தாள்.எதிர் முனையில் "well done, ராணி நம்மளோட secret operation நல்லபடியா முடிஞ்சது, சீக்கிரமா திரும்ப சந்திப்போம்" என கேட்டது.இதைக் கேட்டு ராணியும் சிரித்தாள்.
பின் ராணி தொடர்ந்தாள்"என்ன புனித் நீங்க தான் செத்து ரொம்ப நாளாகுதே!அப்புறம் எப்படி உங்களை பாக்குறது".என நக்கல் செய்தாள். எதிர்முனையில் புனித் "அதை விடுங்க நம்மளோட அடுத்த operation இதைவிட கஷ்டமானது, அதற்கு தயாராகுங்க.நான் போனை வைக்குறேன்"என கூறி இணைப்பை துண்டித்தான்.
_தொடரும்
நண்பர்களே உங்கள் ஆதரவை நம்பி நான் இந்த தொடர்கதையை எழுத ஆரம்பித்துள்ளேன். எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.நன்றி