உன் விழிகளை ஏமாற்றும் நிழல் 555

உன் விழிகளை ஏமாற்றும் நிழல் 555

உயிரே...

புற்களின் மீது நீ கால்
பதியும் போது...

பூவின் மென்மை உன்
பாதங்களில் பதியுமே...

தண்ணீர் உன் கைகளை
நனைக்கும்போது தோன்றும் குளிர்மை...

என் நெஞ்சத்தில்
உறையுமடி உனக்காக...

உன்னை நேசித்த
நாள் முதல்...

உன்னை முழுவதுமாக
எண்ணில் சுமக்கிறேன் நான்...

உன் கண்முன்னே தோன்றும்
தோற்றங்கள்...

சில நேரங்களில் உன்
கண்களையே ஏமாற்றும்...

நீ என்றும் மறந்துவிடாதே
உண்மையை அறியாமல்...

என் தோழியிடம்
நான் பேசியதை...

யாரோ தவறாக சொன்னார்கள்
என்று நம்புகிறாயடி...

உன்னை நேசிக்கும் என்னை
நீ நம்ப மறுப்பதென்னடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Sep-16, 11:08 pm)
பார்வை : 510

மேலே