வாழ்க்கை போராட்டம்

ஓடி விளையாடு பாப்பானு
பாடினான் பாரதி!
எனக்கது வாய்க்கவில்லை!
விளையாடி விட்டு
ஓடி விட்டதன்
விளைவு நான்,
கழித்தலில்,ஆரம்பமான
என் வாழ்க்கை,
கழித்தலை கூட்டுவதில்
தொடர்கின்றது!
விளையாட்டு எனக்கு
மறுக்கப்பட்டது,
இறைவன் வகுத்தது,
போலும்.
பெருகி(க்)ய மனசுமையின்
ஊடே,
மூலதனமில்லா தொழில்
முனைவோருக்கான
பட்டியலில் இடம்
கொடுத்த காயலானுக்கு
நன்றிக்கடனாய்
என் வயிற்று பாட்டிற்கும்
சேர்த்து
பொருக்கிய கழிவுகளை
சுமந்து
கால் நடையாய்
கொண்டு சேர்த்து
நிர்னையித்த விலையை
பெறும் பொழுது
ஓடி விளையாடினாலும்
விளையாட்டே
வாழ்க்கை ஆகா
என்றே
சமாதானம் ஆகி
என் பயணத்தை
தொடர்கின்றேன்
சமமில்லா சமதளத்தில்
சீரின்றி..,
#sof_sekar