அம்மா
அம்மா
~~~~~~~
அமுதூட்டும் வேளையிலும்
அன்பும் கண்டிப்பும் இணைந்தே !!!
ஆதரவு வார்த்தைகளுடன்
ஆதிக்கமும் அதிகமாய் பிறந்ததே !!!
அம்மா என்னும் பெட்டகத்திடம் இருந்து
அறிவுச்சொத்து நான் எடுக்கும் முன்பு
அழையா விருந்தாளியாய் எமனிடம்
அல்லி மலராய் போனாயோ ?
அம்மா என்னும் பொறுமை பூஷணத்திடம்
அரும் பொறுமை பாடத்தினை நான்
அழகாய் கற்றிடவே பொறுமை இல்லையே !!
அறிந்து கற்றிடவே அன்னையும் இல்லையே !!
அம்மா என்னும் தேவதையிடம் இருந்து
அறிந்த பாடங்களை தனியாளாய்
அசை போட்டு நிற்கின்றேன்
ஆசை மேலிடுதே உன்னை பார்க்க !!!
அம்மா என்னும் அழகியே !!!
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை
அன்னையே வானத்தில் இருந்து
அருளோடு துணை நிற்பாயோ?
******* ஆக்கம் கிரிஜா சந்துரு