இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர்த்தோழி

இன்று என் வைரத்திற்கு பிறந்தநாள்
*********************************************

நான் கற்பனையில் கூட
நினைத்து பார்க்காதவள் தான்
என் தோழி.....

இவளை போல்
ஒருத்தியை நான்
கண்டதில்லை
இனியும் காணப்போவதில்லை.....

எந்த ஒரு எதிர்மறையையும்
நேர்மறையாக
நொடியில் மாற்றுவாள்.....

மனதில் சோகம் இருந்தாலும்
முகத்தில் புன்னகை
மாத்திரமே இருக்கும்
எப்பொழுதும்.....

நட்பிற்கும்
உறவிற்கும்
இவள் ஒரு வரம்......

கோபமே
என் தோழி
முகத்தில் நான்
பார்த்ததில்லை.....
அழும் குழந்தைக்கு
அரவணைப்பு வேண்டும் என்று
அறிந்தவள்.....

இந்த உலகம்
எப்படியோ
ஆனால்
என் தோழி
எப்பொழுதும்
ஒரே மாதிரி தான்.....

வார்த்தையில்
சொல்ல தெரியவில்லை
எனக்கு.....
அவள் எங்கே இருந்தாலும்
எல்லா நலமும் வளமும்
பெற்று மகிழ்ச்சியாக
எப்பொழுதும் இருக்க வேண்டும்.....

உன்தோழி
உனை
ஒரு நொடியும்
மறக்க மாட்டேன்.....
என்னைக் காட்டிலும்
அம்மா தான்.....

ஞாயிறாய்
வெளிச்சம்
உன் வாழ்வில்
பரவட்டும்.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உயிரே.....

மண்ணில் வந்து உதித்த தேவதை
என் மனதில் ஆழ பதிந்த
என் தோழி சூர்யா....

~ உன் தோழி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 4:01 pm)
பார்வை : 5697

மேலே