வரம் தருவாயா
அன்பு தங்கையே .....
மரணித்து விடுவேன்
என்று தெரிந்த பின்பும்
இன்னும் மரணத்தை
ஒத்தி வைப்பது
உன் நினைவுகளே...
உன்னை காணுவதற்காகவே
இதயம் துடிக்கிறது...
மரணிக்கும் தருவாயில்
என் விழி தேடும் முகம்
உன் முகமே...
என் மரணம்
உன் மடியிலே...
என் விழி பார்த்து கொண்டிருக்கும் உன்னையே...
என் விரல் கோர்த்து கொண்டிருக்கும் உன்னையே...
என் இதயம் நின்றுவிடும்
உன் மடியில்
நொடியில் ....
வரம் தருவாயா தோழி
உன் மடியில்
என் மரணத்தை....