புதிர்

தட்டாமல் திறந்தது
ஒரு இதயம்
தட்டித் தட்டி திறந்தது
ஒரு இதயம்
இரு இதயம் ஒன்றாகி
கூடியது குலவியது
பல இன்னல்களுக்கு மத்தியில்
இல்லற வாழ்வில் இனைந்து
எட்டாக்கனி கிட்டி
மகிழ்ச்சியில்
திலைத்தது..,
ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
என்ற வாக்கியம்
எபபடி இங்கும் உயிற் பெற்றது
எப்படி என்பது தான் புரியாத புதிரானது!
காதல் காதல் என்றது
காதல் இல்லையேல் சாதல்
என்றதையும்
மறந்தது, கருத்து பேதம்,
கவர்ந்து விட்டது காதலை
புரிதல் விட்டுக்கொடுத்தல்
இன்றி
இனைந்தது பிரிந்தது
இதயத்தை பூட்டிக் கொண்டு
இருவேறு பாதையில் பயனித்தது
இங்கே கானாமல் போனது
காதலா?
காதல் என்ற வார்த்தையா?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்
"காதல் "என்றால் என்ன? #sof #sekar