உனக்காக

ரோஜாவை பிடிக்கும் போது
எவ்வளவு அழகாய் தெரிகிறாய்
இந்த
ராஜாவை பிடித்து பார்
இன்னும் பேரழகாய் தெரிவாய்....
உன் அருகில்
நான் இருக்கும் போது
பூவுக்கு முத்தம் குடுத்து
என்ன பயன்
அது திரும்பியா தரப்போகிறது....
கடல் நீர் உன்னை ஒரு முறை
தொட்டுவிட்டதால் வாழ்நாள்முழுவதும்
அலையடிக்கிறாயே...
பார்
கடல் அலையும் நுரை தள்ளுகிறது
உன் பாதம் பட்ட இடத்தில்
உனக்காக...
-ஜ.கு.பாலாஜி -