கானல் காதல்
அவள் விழிகளை என் விழிகள் நோக்க
என் விழிகளை அவள் விழிகள் பார்க்க
எமதிடையே காதல் அரும்பியது அது
கண்டதும் காதல் என்று எண்ணி இருந்தேன் நான்
என்னுள் ஏதோ இன்ப அலைகள் முட்டி மோதின
அதே நினைவில் வீடு திரும்பினேன்
அடுத்த நாள் அதே இடம் அவளை சந்தித்தேன்
பேர் அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு
அங்கு அவளுடன் ஓர் வாலிபன் நின்றிருந்தான்
பின்னர் அறிந்தேன் அவன் அவள் அன்னான் என்று
இன்று எங்கள் கண்கள் கண்களை நாடவில்லை
நேற்றைய பார்வை என்னுள் எழுந்த வீண் நினைப்பு
இது என்ன காதல் எந்தன் காதல்
ஒரு முகக் காதலா ? இல்லை நான் கண்டது
வெறும் காதல் கானலா?
இனி இந்த காதல் மோகம் வேண்டாமப்பா என்று
சிந்தை தெளிவடைந்தேன்
என்னுள் எரிந்த காதல் தீ அணைந்தது