நெற்றிக் கண் திறப்பினும்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே......
********************************
என்ன சொன்னாலும் சரி என்று
சொல்லும்
உலகம் உள்ளவரை
எந்த முன்னேற்றமும் வந்து விடாது.....
ஏன் இப்படி சொன்னார்கள்.....
இது நன்மை விளைவிப்பதா.....
இது சாத்தியமா.....
உண்மையா......
என்பதை எல்லாம்
ஆராய வேண்டும்
அது யாராக இருந்தாலும்
முதலில் அதை அவர்கள்
செய்து முடிப்பார்களா
என்பதை அறிய வேண்டும்.....
செய்யவில்லை
என்றால்
ஏன் செய்யவில்லை என்று
யாராக இருந்தாலும்
கேள்வி கேட்க வேண்டும்......
சிறியவர்
பெரியவர் என்று
பேதம் பார்க்கக் கூடாது
நல்லதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம்
நல்ல மனம் படைத்தவர்கள்
எல்லோருக்கும் வாழ்த்து
சொல்லலாம்
வயது ஒரு பொருட்டே அல்ல...
மனது தான் முக்கியம்.....
புறத்தின் அழகை விட
அகத்தின் அழகே சிறப்பாகும்.....
~ பிரபாவதி வீரமுத்து