முன்னேறு
முன்னேறும் எண்ணமதை வளர்த்திடு வளம்பெற
ஆற்றலும் அறிவும் முன்னேற்றத்தின் படிகளடா
எதிலும் சிந்தித்து முடிவெடு குழப்பமன்றி
வெற்றியை அடைந்திட முயன்றிடு நீ
காலமும் களிப்புடன் நீயும் வாழ்ந்திடு
முன்னேற்றத்தால் மலரும் முகமதுவும் மத்தாப்பூ
தோல்வியே கண்டாலும் துவண்டு விடாதே
வெற்றிக்கு வித்தாகும் அனுபவமே பாதையாய்
களத்தில் எதையும் சந்திக்க வேண்டுமன்றோ !
--------
அறிவார்ந்த முறையில் அணுகிடு உயர்ந்திட
உழைத்து பழகிட்டால் அயர்வும் வந்திடுமா
உலகத்தை உணர்ந்திடு உள்ளத்தில் சலனமின்றி
புதுவாழ்வும் கண்டிடவே முன்னேறிடு நீ
தளராத உள்ளமுடன் தடைகளை நீக்க்கிடு
வாழ்வும் மணக்கும் வாசமுள்ள மல்லிகைப்பூ
புதுயுகம் கண்டாலும் பழமையை மறவாதே
சமுதாய மாற்றம் நிகழ்ந்திட நல்வித்தாவாய்
முன்னேற்றம் ஒன்றே நல்வாழ்விற்கு வழியன்றோ
பழனி குமார்

