உன் பெயரில் ஒரு கவிகூற நான் ஊமையானதேனோ

உன் பெயரில் ஒரு கவிகூற நான்
ஊமையானதேனோ
ஓராயிரம் வரி தெளிக்கும்
உவமை அல்லவா உன் பெயரும்

பாவம் அவள் பரிவிதையே என்னில்
பாசம் பல வைத்தாலோ என்
சுவாசம் எனை நீங்கயிலும்
சுமப்பேனடி உன் சிறு நினைவுகளேனும்

சிரிப்பு
கோபம்
அழுகை
ஆனந்தம் -எத்தனையடி
உன்னில் இன்பம் -இதை
ஆராய்ந்து கூற ஆராய்ச்சியாளன் இல்லையோ இம் மண்ணில் என்பதே
துன்பம்

எழுதியவர் : சஹ்லா பர்வின் (23-Sep-16, 11:23 pm)
பார்வை : 90

மேலே