பரிதாப பஞ்சாயத்து தேர்தல்
பணமோகம் கொண்ட பந்தங்களும்
பதவிமோகம் கொண்ட சொந்தங்களும்
பாலாய் போவதும் இந்த தேர்தலில்தான்
படும் வீனாய் போவதும் இந்த தேர்தலில்தான்
வீடும் ரெண்டாகும்
ஊரும் துண்டாகும்
இப்படியே தொடர்ந்தால்
இனி வரும் காலம் என்னாகும்?
பல்லு போன தாத்தாக்களும் பாட்டில் கேட்கிறார்கள்
பள்ளி செல்லும் மாணவர்களும் அதில் பங்கு கேட்கிறார்கள்
இது நமக்கு தேவையா?
தேர்தல் என்ன போதையா?
வெள்ளை வேட்டிக்கு வேலை வரும்
வெட்டி பந்தாவும் கூட வரும்
கொள்ளையடிக்க திட்டம் போட்டு
கோமாளியெல்லாம் ஒன்னு சேரும்
இது அழிவின் ஆரம்பமா?
இல்லை அரசியலின் ஆடம்பரமா?
தன் சின்னத்தை
வண்ணமாக சுவரில் பூசி
நம் எண்ணத்தை கவர முயற்சிப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ
எனக்கு தெரியவில்லை
பள்ளி சுவரில் வெள்ளை அடித்து
பல வருடம் ஆகிவிட்டது.
நம் இல்லறைக்கு தேடி வந்து
சில்லரையே கண்ணில் காட்டி
நம்மை கல்லறைக்கு வழியனுப்ப முயற்சிப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு புரியுமோ
புரியாதோ
எனக்கு புரியவில்லை
அடிப்படை வசதி செய்துதராமல்
ஆயிரம் ரூபாய் கொடுத்து என்ன செய்ய..?
அடிப்படை வசதிகளை செய்துதராமல்
ஆயிரம் ரூபாய் கொடுத்து என்ன செய்ய...???