காற்றில் கரையும் கல்லறைகள்

காற்றில் கரையும் கல்லறைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதயத்தை உன் காலடிகளில் போட்டேன்....
இனியும் உணரவில்லை நீ ........

இதமாய் உன்னை பேச சொன்னேன் .
இங்கிதம் மறந்தாய் நீ.......

இலைகளாய் சருகுகளாய் இளமை
இமைக்கவும் மறந்தாய் நீ....

"இனியேனும் வருவாயா என் கல்லறைக்கு ??"
இனி கேட்க நான் இருக்க மாட்டேன்....

இதயம் கனிந்து நீயாய் வரும்போது
இதயம் துடிக்குமா உனக்கு?

இயற்கைக் காற்றில் என் கல்லறையும்
இனி கரையட்டும்....உனக்கு என்ன?


**** ஆக்கம் கிரிஜா சந்துரு

எழுதியவர் : ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு) (24-Sep-16, 7:21 am)
பார்வை : 56

மேலே