என் எழில் தேவதையே

துயிலும் கல்லில்
சிலை எழுப்பினான் சிற்பி !
துயிலும் என் விழிகளை
கனவால் எழுப்புகிறாய் நீ
விரியும் கனவில்
மௌனமாய் சிரிக்கிறாய்
கனவு முடியும் முன்னே
கரையோர படகில்
கையசைத்து எங்கோ செல்கிறாய்
மீண்டும் வருவாயா என்றால்
புன்னகையில் புதிர் போடுகிறாய்
இரவோடும் கனவோடும் உன் நினைவோடும்
போராடுகிறேன் ஒவ்வொரு நாளும்
என் எழில் தேவதையே !
----கவின் சாரலன்