போராட்டங்கள்
அறவழிப் போராட்டம் என்பார்
பின்னர்
வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்
மக்களுக்குச் செய்யும் இடையூறை
மகேசனுக்குச் செய்யும் தொண்டாக நினைப்பார்.
அமைப்புகளையும் கட்சிகளையும் வளர்க்க
வன்முறையும் உயிரிழப்பும்
அரங்கேற்றும் அறிவிலிகள்
காந்தி மகான் பிறந்த
இந்த புண்ணிய பூமியில்!