தரணி வியக்க தழைத்த தமிழன்

தரணி வியக்க
தழைத்த தமிழன்!
----------------------------------
அன்னை தந்தை
அருளில் பெரியோர்
சக்தியில் எளியோர்
சரோஜா தங்கவேலு
அன்பின் திறத்தால்
பின்னம் இன்றி
அவன் அருளால்
அவனியில் வந்தோன்!

மாறிடும் உலகில்
மாறாத புகழை
மாரிபோல் நன்றே
மான்புற ஈட்ட
சூல் கொண்டு
சூட்டினர் பெயர்
மாரிக்கு அப்பன்
மாரியப்பன் என்றே!

பின்னை நாளில்
பின்னம் எய்தி
அங்கம் குலைந்து
அவதி உற்றோன்!
துஞ்சல் இல்லாது
அஞ்சல் இன்றி
ஊனம் உதறி
ஊக்கம் உடைத்தோன்!

மாற்றுத் திறனாளி
மாசற்ற போராளி
உழைத்து உயர்ந்து
உயரம் தாண்டி
தரணி வியக்க
தழைத்த தமிழன்
தன்மானம் காக்க
தனதாக்கிய வெற்றி!

சிங்கத் தமிழன்
தங்கம் வென்றது
எஞ்ஞும் நம்பிக்கையில்
விஞ்சும் மகிழ்ச்சியாம்.

அரியச் செயலாற்றி
அஞ்சல் துறையும்
ஊக்கம் விளம்ப
உயரம் தாண்டியது!
விஞ்சும் மகிழ்ச்சியால்
நெஞ்சம் பூரிக்க
அஞ்சல் தலையாய்
அருமையாய் உதித்தது!
வாழ்த்துக்கள்.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (26-Sep-16, 7:36 am)
பார்வை : 218

மேலே