நட்பே காதலாக
மழைகாலம் என்பதால் லேசாக தூரிக்கொண்டிருந்தது.அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கண்ணன் கல்லூரியிலிருந்நு வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டிருந்தான். பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் காத்து நின்றனர்.அந்த கூட்டத்தில் ஒருவனாய் பேருந்தை நோக்கி காத்திருந்தான்.
பேருந்துநிலையத்திலிருந்த கூச்சலில் காயத்ரி கூப்பிட்டது கண்ணணின் காதில் விழவில்லை.பொறுமை இழந்த காயத்ரி கண்ணணை நெருங்கி அவன் கையை பிடித்தாள். பயத்தில் கண்ணன் சட்டென உதறினான்.பின் காயத்ரியை பார்த்ததும் அமைதியானான்.
காயத்ரி கண்ணணின் பள்ளியில் உடன் படித்தவள். நீண்ட நாட்கள் கழித்து கண்ணணை பார்த்ததில் சிறிதாக வெட்கம் அவளின் கண்ணங்களை சிவக்க வைத்தது.ஆனால் அவனுக்கோ இது கனவு போன்று இருந்தது.
இருவரும் சேர்ந்து பேருந்துநிலையத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினர்.காயத்ரி விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
சில முறை அவனை தொட்டு தொட்டும் பேசினாள்.அவளின் தீண்டல் கண்ணணின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. பள்ளியில் அடிக்கடி சண்டையிடும் காயத்ரி இன்று இப்படி பேசுவதை அவன் கற்பனை கூட செய்தது கிடையாது .பெயர் கண்ணன் என்றாலும் பெண்களின் மீது அவன் கவனம் திரும்பியதே கிடையாது.இதனாலேயே காயத்ரிக்கு கண்ணணை கண்டாலே பிடிக்காது. ஆனால் இன்று அப்படி தெரியவில்லை.
அவளின் பேச்சு அவன் மீது கொண்ட அக்கறையை காட்டியது.
பேருந்து நிலையத்தில் இருந்து நீண்ட தூரம் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்களின் வழியில் ஒரு பூங்கா குறுக்கிட்டது.இருவரும் காலாற அங்கு சென்று அமர்ந்தனர்.
கண்ணன் காயத்ரியின் அருகில் அமர்ந்தது அது தான் முதல் முறை. ஆயிரம் முறை பார்த்த அவளின் முகம் இன்று புதிதாக தெரிந்தது.அவனின் பார்வை அவன் கட்டளையின்றி அவளின் அழகை ரசித்தது.மிருதுவான அவள் கரம் தீண்டும் போதும், பொன்னகை போல புன்னகை புரியும் போதும் அவன் அவனாக இல்லை.நீண்ட நேர உரையாடலுக்கு பின் இருவரும் பேருந்து நிலையத்திற்க்கு வந்தனர்.இருவரும் ஒரே பேருந்திற்காக தான் காத்திருந்தனர்.பின் பேருந்திலும் பேசிக்கொண்டே சென்றனர்.
இறங்க வேண்டிய இடம் வந்ததும் இருவரும் மனமின்றி இறங்கிச் சென்றனர்.ஆனால் இருவரும் தங்கள் செல் பேசி எண்ணை பரிமாறிக் கொண்டதால் அவர்களின் நட்பு காதலாக மாற வாய்ப்பு கிடைத்தது.