மௌனமாக நிற்கும் என் காதல்
வெட்கம் நதிகளாய் கொண்ட
புனித கங்கை அவள்...!
காதல் ஜதிகளாய் கொண்ட
புனித நங்கை அவள்...!
அதிகாலை அவள் சிரிப்பில்
உதித்தது ஓர் பூபாளம்...!
அந்திமலை அவள் அழகில்
விழுந்தது ஓர் பூ பாலம்...!
அவள் பார்வை என்றும்
என் மனதில் ஓர் பூகம்பம்...!
அவள் நினைப்பு என்றும்
என் மனதில் ஓர் பூக்கம்பம்...!
மொழி புரிந்தும்
மொழியாமல்
மௌனமாக
நிற்கும்
என் காதல் ராணி அவள்...!
-ஜ.கு.பாலாஜி-
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
