ஆதலினால் கன்னம் சிவந்தது

#ஆதலினால் கன்னம் சிவந்தது..!

கல்லூரி செல்லும் அவளை
கைதட்டி வழி நிறுத்த
வழி தெரியா பேர்வழி
வழி கேட்பதாய் எண்ணி
வஞ்சி நிமிர்ந்த அந்நொடியில்
காற்றினிலே பறக்க விட்ட
முத்தமவளை தொடும் முன்னே
அவன் கன்னத்திலே
இறக்கிவைத்தாள்
காரிகையும் ஓர் அறையை..!

சிவந்த கன்னம் பருக்கும் முன்னே
இடமகன்றான் அவமானமுடன்
நடுவழி முத்தமெல்லாம்
அவன் காடு செல்லும் வரை
மறந்திருப்பான் இனியவனும்
மதித்திருப்பான் பெண்ணினமும்..!

எழுதியவர் : சொ.சாந்தி (27-Sep-16, 6:26 pm)
பார்வை : 224

மேலே