நரன் மரன்

ஏண்டப்பா பொன்வண்ணா எம் மருமக மருதாணி முதல் பிரசவத்திலயே ரட்டப் பசங்களப் பெத்திருக்கறா. நீ டாக்டர் (முனைவர்) பட்டம் வாங்கி தமிழ்ப் பேராசியரா வேல பாக்கற. எம் பேரனுங்களுக்கு என்னடா மத்தவங்க மாதிரியே மரனு நரனு-ன்னு பேரு வச்சிருக்கறயே.
@@@@@@
அம்மா நீங்க சொல்லறதெல்லாம் சரிதாம்மா. ஆனா தமிழ்ப் பேராசிரியர்களே இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறது தான் மிக உயர்ந்த நாகரிகம்னு சொல்லறாங்க. நா மட்டும் எம் பசங்களுக்கு தமிழ்ப் பேர வச்சா நல்லா இருக்குமா?
@@@@@
உம்... ஊரோட ஒத்துப் போகணும்னு நீ நெனைக்கிற. இதுக்கு மேல நா ஒன்னும் சொல்லறதுக்கில்ல. சரி அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்ன்னாவது சொல்லுப்பா.
@######
நரன்-ன்னா "ஆடவரின் நற்பண்பு கொண்ட"-ன்னு அர்த்தம். இது சமஸ்கிருத மொழில உருவான சொல். பண்பைக் குறிக்கும் சொல். மரன்-யூதர்கள் பேசற மொழில உள்ள பெயர்ச் சொல். அதுக்கு "நம் தவைவன்/நம் ஆசிரியர்"ன்னு அர்த்தம்.
@##@@
இது தாய்ப் பால் இருக்க புட்டிப் பால் குடுக்கற மாதிரி.
@@@@@@@@@@@@@@@@@@
நகைக்க அல்ல. தமிழ்ப் பற்றை வளர்க்க. தமிழ் நாட்டில் வாழ்கின்ற இந்திக்காரர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுவதில்லை. நமக்கு ஏன் அந்தத் தன்மானமும் மொழிப் பற்றும் இல்லை?

எழுதியவர் : மலர் (28-Sep-16, 12:01 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 171

மேலே