தரையில் நிலவின் உலா

அவள் காதல் தேவதை
என் மனவானில் உலா போகும்
தேவகண்ணிகை...

அவள் மங்கையர்கரசி
பருவ மங்கையரின் எல்லா
அழகையும் களவாடி
தனதாக்கிய இளவரசி...

அவளின் அழகு நாற்பது கிலோ
ஆம் அவளின் மொத்த உடல்
எடையும் நாற்பது கிலோதான்...

எல்லா அழகையும் அறிவையும் திறனையும் உல்லடக்கிய
அழகுத்தட்டவள்
அவளிடம் அழகுக்கு தட்டு இல்லை...

அழகுக்கே அழகு குறிப்பு
சொல்லும் இயற்கை பேரழகி....

மாந்தளிர் இதயம் பூந்தளிர் தேகம்
கண்டதும் மயங்கும் தோற்றம்
இவள் வெளியே வந்தால் தரையில்
ஒரு நிலவின் உலா...

அழகுக்கு இலக்கணம் வகுத்த
அபிநய சுந்தரி...
இவள் அழகில் விழந்த நான் இன்னும்
எழவில்லை...

எழுதியவர் : செல்வமுத்து.M (28-Sep-16, 9:12 am)
பார்வை : 124

மேலே