காற்றில் பறந்த கவிதை

காற்றில் பறந்த கவிதை


மழையின் போது விரியாத குடை மழை நின்றதும் விரிந்ததைப்போல்

ஜன்னல் ஓரம் அமர்ந்திட நினைக்கையில் ஊர் வந்து சேர்ந்ததைப்போல்

நடை சாத்திய பின் கடவுளை தரிசிக்க சென்ற பக்தனைப்போல்

பணம் வந்தும் பத்தியம் இருக்கவேண்டிய நோயாளியைப்போல்

வேலை தேடிச் சென்ற கம்பெனி காணமல் போனதைப்போல்

காதுக்கம்மல் வாங்க போனபோது கழுத்து சங்கிலி களவாடப்பட்டது போல்

தாகம் எடுக்கையில் தேங்கி கிடக்கும் நீர் கானல் நீரானதைப்போல்

பிடிக்க நினைக்கையில் பறந்து போன ஒரு பட்டாம் பூச்சியைப்போல்

காதலைச் சொன்னபோது கல்யாணப் பத்திரிக்கையை நீட்டியவள்

காற்றில் பறந்தது எனக்கான கவிதை
Posted by MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்

எழுதியவர் : முல்லைராஜன் (29-Sep-16, 9:20 am)
சேர்த்தது : mullairajan
பார்வை : 96

மேலே