காதலை தேடி-22

காதலை(லே) தேடி-22
யாருமறியாத காதல் மொழியில்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என் இதயத்தால் உன் இதயத்தோடு....
யாருமறியாத போதும்
காதல் மட்டுமே வார்தைகளாகி
காதல் மட்டுமே பாஷையாய் மாறி
காதல் மட்டுமே ஒலியென விரிந்து
காதல் மட்டுமே உன் காதுக்குள் நுழைந்து
நம் காதல் மட்டுமே பேசி கொள்ளும்
நம் காதல் மொழி ஒன்றே போதும்
என் சகியே .......
நான் காலமெல்லாம்
உன்னோடு வாழும் நம்
காதல் வாழ்க்கைக்கு.....
சகியின் புன்னகையை பருகிக்கொண்டே விமானத்தில் பறந்துகொண்டிருந்தேன், என்றுமில்லா திருநாளாய் இன்று மனதுக்குள் அத்தனை குதூகலம், நேற்று இருந்த கவலைகள் எல்லாம் எங்கோ தந்தி அடித்துக்கொண்டு ஓடிவிட்டதை போல் மனம் இலவம்பஞ்சாய் இலகுவாக புது நம்பிக்கையை சுமந்து கொண்டிருந்தது.....
இத்தனைக்கும் காரணம் எங்களின் முதல் முத்தமும், என்னவளின் காதல் புன்னகையும் தான்.... நிச்சயமாக இன்று என் வாழ்க்கையிலேயே ஸ்பெஷலான நாள் தான்.....
ஏன் இத்தனை மகிழ்ச்சி, ஏன் இத்தனை குதூகளிப்பு, பொங்கிவரும் பால் அடுப்பை அணைக்குமா? பானையை தள்ளுமா? .இதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் நான் இல்லை, இப்போதைக்கு இந்த நொடி சந்தோசம் போதுமானது....
என் கடந்த கால நினைவுகளிலிருந்து மெதுமெதுவாக என் மனம் வெளியே வரவும்,எனக்காக புக் செய்யப்பட்ட ரூமை நாங்கள் அடையவும் சரியாக இருந்தது....
"சார், நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க....நான் நாளைக்கு மார்னிங் இந்த ஊரை பத்தி நல்லா தெரிஞ்ச டிரைவர் ஒருத்தர கையோட கூட்டிட்டு வரேன், அவர் உங்களுக்கு எல்லா இடத்தையும் சுத்தி காட்டுவார், நீங்க யாரை தேடி வந்திங்களோ அவங்கள கண்டுபிடிக்க அவர் உங்களுக்கு உதவி செய்வார், இந்த ஊரோட எல்லா தடங்களையும் தெரிஞ்ச ஒரு டிரைவர் நம்மளோட இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன், டேக் கேர் சார், நான் கிளம்பறேன்"
பல வருடங்களுக்கு முன்னும் சரி, இப்போதும் சரி பணத்தை வைத்து பந்தங்களை பதம் பார்க்கும் குணம் என்றுமே எனக்கு வந்ததில்லை, ...அதனாலேயே வினோத், ரவி இப்பொழுது முகமது..இவர்களை போன்ற நல்ல நண்பர்கள் என்னோடு பயணிக்க காலம் வழி செய்திருக்கிறது....
எல்லாம் இருந்தும் எதற்காக இத்தனை நாள் வேலை வேலை என்று கடிகார முள்ளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன், இத்தனை வசதி வாய்ப்புகளும் என் பெயரில் குவித்துக்கொண்டு எதற்காக இப்படி ஒரு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன், எனக்காகவா இல்லையே, சரி சகிக்காகவா என்றாலும் இந்த பயணமே அவளை தேடி தானே ....அவளின் அருகிலே இல்லாமல் அவளை ஒருமுறை கூட பார்க்கும் தைரியம் வராமல் கோழையாக எங்கோ ஒளிந்துகொண்டு அவளை மறக்கவும் முடியாமல் அவள் முன்னே போய் நிற்கவும் முடியாமல் வாழாமல் வாழும் இந்த நரகவலியெல்லாம் அன்று நடந்த அந்த ஒரே நாளின் அவலங்களாலே தானே.....அதை மறக்க முடியுமா, இல்லை மறைக்க தான் இயலுமா......
என் வாழ்க்கையை நான் தொலைத்து வெறுமையோடு வெறுங்கையோடு நின்ற அந்த நிமிடங்கள் இன்றும் என் கண்முன்னே நிழல் போல் ஆடுகிறது.....
"ஹலோ, சாரதி.. ரூம்க்கு போய் சேர்ந்துட்டயாப்பா, ட்ராவெலிங்களாம் சௌகரியமா இருந்ததாப்பா, உங்கப்பா தான் என்ன போன் பண்ணவே விடல, இல்லனா இந்நேரம் மூணு தடவ போன் பண்ணி விசாரிச்சிருப்பேன், எல்லாம் உங்க அப்பா பண்ற வேலை"னு சலித்து கொண்ட அம்மாவிடம் "அம்மா நீங்க கால் பண்ணிருந்தாலும் அப்போ என்னால பேசியிருக்க முடியாது, அப்பா சரியா தான்மா சொல்லிருக்காரு....இப்போ தான் நான் ரூம்க்கு வந்தேன், எல்லாமே சௌகரியமாவே இருந்தது......நானும் நல்லா இருக்கேன், சரிம்மா நான் அப்புறமா பேசறேன், M .D கூப்பிடறாரு....."
"இருடா சகிகிட்ட ஒரு வார்த்தை பேசிடு" என்று அம்மாவின் குரல் சன்னமாக கேட்கவும் நான் போனை கட் செய்யவும் சரியாக இருந்தது.....
இதற்காக தான் அவசர அவசரமாக M .D கால் செய்வதாக பொய் சொல்லி போனை கட் செய்தேன்....பின்ன என்னவாம் இத்தனை நாள் அவள் அருகாமைக்காக நான் எவ்வளவு தூரம் ஏங்கியிருப்பேன், இன்னும் ஒரு வாரம் அவள் ஏங்கட்டுமே, அப்பொழுதாவது என் காதலும் என் மேல் அவள் வைத்திருக்கும் காதலும் அவள் மரமண்டைக்கு புரிகிறதா என பார்க்கலாம்....
எப்படியோ சகியிடம் பேசாமல் இரண்டு நாட்களை வெற்றிகரமாக கடத்திவிட்டேன், இன்னும் மீதம் இருக்கும் நான்கு நாட்களை கடந்துவிட்டால் போதும், பாசிட்டிவ் ரிசல்ட் வர நிறைய வாய்ப்பிருக்கிறது, இதுவரை சகி என்னிடம் பேச முயற்சி செய்ததை போல தெரியவில்லை தான், இருந்தாலும் இவளை போன்ற ட்யூப் லைட்டுக்கெல்லாம் ரெண்டு நாளில் ஒன்னும் விளங்கப்போவதில்லை, அதனால் மீதி உள்ள நான்கு நாட்களும் தான் என் காதலுக்கான மாபெரும் ஆயுதம்.....
"சார், நீங்க இன்னும் கிளம்பலையா, இன்னைக்கு தான் உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணியிருக்கோம், எங்க M .D . சார் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு, நீங்க இப்போ எங்க இருக்கீங்க, வர எவ்வளவு நேரம் ஆகும்னு கரெக்டா சொல்லுங்க சார், நான் சார் கிட்ட இன்பார்ம் பண்ணனும்"
இவன் வேற நொய் நொய்ன்னு போன் பண்ணி தொல்லை பன்றான், எனக்கு இன்னைக்கு மீட்டிங் அட்டென்ட் பன்ற மைண்டே இல்ல, என்னவோ தெரில சகிகிட்ட பேசாம மனசுக்கு என்னவோ போல இருக்கு......இப்போ என்ன பண்றது, கண்டிப்பா இந்த மீட்டிங் எனக்கு மட்டும் இல்லை, என்னோட கம்பெனில இருக்க ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப முக்கியம், எந்த சில்லியான காரணம் சொல்லியும் தள்ளி போட முடியாது....வேற வழியே இல்ல, போக தான் வேணும்.....
"சாரி சார், இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்னு மட்டும் உறுதியா சொல்லிடுங்க" என்று சொல்லிமுடித்து எதிர்முனையில் பேசியவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் செய்தேன்...
நான் மீட்டிங்க் ரூம்க்கு போய் இந்த நிமிடத்தோடு ஒரு மணிநேரம் நாற்பது நிமிடம் ரெண்டு வினாடி ஆகிவிட்டது, இன்னும் M .D வந்து சேரவில்லை....அதற்கான காரணம் எல்லாருக்குமே தெரிந்தது தான், இன்னைக்கு எப்படியும் இந்த மீட்டிங் நடக்க போவதில்லை என்று ஆஃபீஸுக்குள் நுழையும்போதே சிலர் பேசிக்கொள்வது காற்றின் வழியாக என் காதுக்குள் விழுந்தது....அதற்க்கு காரணம் கூட நான் அதிகப்படியாக எடுத்துக்கொண்ட அந்த பதினைந்து நிமிடங்கள் தான்....M .Dயை காக்க வைத்தால் அவர் அவரின் வேலையை காட்ட தானே செய்வார்....
எப்படியோ இன்று இந்த மீட்டிங்கை நான் அட்டென்ட் செய்தாலும் எல்லாம் பிளாப் தான் ஆகும், அந்த அளவுக்கு என் மனம் முழுக்க முழுக்க சகியின் குரலை தேடி என் உள்ளுக்குள்ளே தவித்து கொண்டிருந்தது...
அதற்க்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் நானே கால் செய்து பேசிவிடலாம் என்று போனை எடுத்து நம்பரை அழுத்தி டயல் செய்து ஒரு நொடி கடந்திருக்கும், 'ம்ம்ஹூம், கண்டிப்பா இப்போ போன் செஞ்சு பேசிட கூடாது, இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு, எப்படியாவது கண்ட்ரோலா இருக்கணும் சாரதி' என்று எப்படி எப்படியோ என் கவனத்தை திசை திருப்பி பார்த்துவிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை, அரைமணி நேர போராட்டத்திற்கு பின் 'சரி, பேசியே விடலாம்', என்று ஒரு முடிவோடு நம்பரை அழுத்த அதற்குள் அம்மாவிடம் இருந்து கால் வந்து என்னை ஒரு நிமிடத்தில் உறைய வைத்தது.....
பின் சகஜநிலைக்கு திரும்பி அம்மாவின் வழக்கமான நலம் விசாரிப்புகளை கேட்க ரெடி ஆனேன்...
சாரதி, என்னப்பா பண்ற? சாப்பிட்டியா? வேலை எல்லாம் நல்லா போகுதா? வேலை வேலைனு ரொம்ப அலையாதப்பா, உடம்பு அசதியாகிடும், ஒரு வாரம்னு சொல்லிட்டு போனதால அந்த கணக்குலயே இருந்துடாத தம்பி, வேலை சீக்கிரம் முடிஞ்சா உடனே ஊர்க்கு கிளம்பி வாப்பா, நிறைய முறை வேலை விஷயமா வெளியூருக்கு போயிருக்க, ஆனா இந்த தடவ என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்குப்பா, சீக்கிரம் வந்துடுப்பா" அம்மாவின் எல்லா விசாரிப்புகளுக்கும் நெஞ்சம் நிரம்பிய வலிகளோடும் பாசத்தோடும் பதில் சொல்லி முடித்த பின்னர் தான் சகியின் நினைவு மனதை மேலும் அழுத்தியது.....
அம்மாவின் இந்த 'மனசுக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்குப்பா, சீக்கிரம் வந்துடுப்பா' வார்த்தைக்கும் கலக்கத்திற்கும் உள்ள உண்மையான பலம் புரிந்திருந்தால் வாழ்க்கையில் நான் சந்திக்க இருக்கும் பல கஷ்டங்களை தடுத்திருக்கலாம் தான்....
என்ன செய்ய, இப்பொழுது அதை பற்றி யோசிக்கவோ இல்லை பொருட்படுத்தவோ கூட தோன்றவில்லை, சகியிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது....
சகியை பற்றி பேசலாமா வேண்டாமா ஒரு அலசலுக்கு பின் நான் வாய் திறக்க, அம்மாவே சகி இப்பொழுது வீட்டில் இல்லை, கடைக்கு சென்றிருக்கிறாள் என்னும் தகவலை சொல்லியதோடு
அவள் வந்ததும் பேச சொல்கிறேன் என்று என் மனதை படித்ததை போல கூற நானும் ஏமாற்றத்தோடு போனை வைத்தேன்.....
என் காதல் உணர்வுகள் தாய்மையின் உணர்வுகளை புரிந்து கொள்வதை கோட்டை விட்டு விட்டது.....அதனாலேயே நான் மிக பெரிய இழப்பை சந்திக்க வேண்டியதாய் ரீங்காரமிட்டு சொன்னது விதி....