காதல் ஒரு மாய நோய் !மருந்து வேண்டாம்!!.

காதல்
கண்ணின்றி பார்க்கும்
காலின்றி நடக்கும்
கதை இன்றிநடிக்கும்
கை இன்றி எழுதும்
வலி கொண்டு துடிக்கும்
தடை கண்டு தவிக்கும்
உறக்கம் விழிக்கும்
உணவை தவிர்க்கும்
உறவை துறக்கும்
அறிவை மயக்கும்
தன்னை மறக்கும்
தனிமை நினைக்கும்
கண்ணை மறைக்கும்
கனவில் மிதக்கும்.
இது ஒரு
மாய நோய்
மருந்து வேண்டாம்
மயக்கம் மட்டும்
போதும்.