கவிதை 126 வாழ்வும் ஜொலிக்கத் தவறுவதில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்மதி வானில் முளைக்கையிலே
கதிரவன் விண்ணில் தெரிவதில்லை
நிதானம் மனதில் இருக்கையிலே
உணர்ச்சிகள் உள்ளத்தை தாக்குவதில்லை
அன்பு அதிகம் வருகையிலே
கஷ்டங்கள் பெரிதாய் உணர்வதில்லை
மன்னிக்கும் தன்மை கொள்கையிலே
தவறுகள் குறையாய் தெரிவதில்லை
உதவிகள் செய்வது தொடர்கையிலே
கவலைகள் அதிகம் வருவதில்லை
தோல்விகள் பாடமாய் அமைகையிலே
வெற்றிகள் வராமல் இருப்பதில்லை
உறவுகள் துணையாய் நிற்கையிலே
மரணங்கள் உள்ளத்தை வதைப்பதில்லை
நம்பிக்கை பலமாய் மாறுகையிலே
மாற்றமும் துன்பங்கள் தருவதில்லை
அனைவரையும் உடன்பிறப்பாய் நினைக்கையிலே
வாழ்வும் ஜொலிக்கத் தவறுவதில்லை
இறைவனை சரண் அடைகையிலே
தன்னை உணராமல் வாழ்வதில்லை