சிங்காரப் பூமிக்குச் சீர்

(வெள்ளொத் தாழிசை)

அங்கம் மறைத்தபடி ஆவியென வானுலவி
எங்கும் மழைகொடுக்க ஏற்ற முகிலுழவர்
சங்கடம் தீர்தற்குச் சான்று

எங்கும் குளிர்தனை ஏற்றிவைக்கும் மார்கழியில்
தொங்கும் இலைநுனித் தூங்கும் பனித்துளியே
மங்காப் பரவசத்தின் மாண்பு

மங்காப் புகழ்கொண்டு மாமலை மேல்நின்றுப்
பொங்கும் புனலெடுத்துப் பாயும் நதிமகளே
சிங்காரப் பூமிக்குச் சீர்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Sep-16, 3:19 pm)
பார்வை : 259

மேலே