உள்ளம் பூக்காத அன்பு

அன்பு இல்லை உன் நெஞ்சிலே...
அம்பு எய்தாய் என் நெஞ்சிலே...
கண்கள் மலரும் வண்ண கனவிலே...
கல்லை எறிந்தாய் இன்று நினைவிலே......
வாசம் பார்த்து நேசம் வைத்தாய்...
வேசம் அறியாது விழுந்து விட்டேன்...
விசம் ஒன்றை உயிரில் தெளித்தால்...
தேசம் விட்டுத் தேகம் போகுமே......
இதழ்கள் சிரித்து நீயும் வந்தாய்...
இதயம் கிழித்து விண்ணில் பறந்தாய்...
என்னில் முளைத்த உந்தன் காதலும்
ஊனைத் தின்று உறங்கிப் போனதே......
உள்ளம் பூக்காத அந்த அன்பிலே...
உதிர்ந்து சருகானது எந்தன் இதயமே...
வேர்கள் இல்லாத இந்த உறவிலே...
விருட்சம் எப்படி வளரும் மண்ணிலே......
பொய்யான அன்பில் தன்னை இழந்து
தாயின் அன்பிலே தாகம் தணித்தேனே...
அன்னை மடியில் தலைச் சாய்த்து
சொர்க்கம் ஒன்றை மீண்டும் கண்டேனே......