என்னவளே அடி என்னவளே

கண்மணியே உயிர் கண்மணியே
எந்தன் கண்களை கசக்கி விட்டாய்...
விழி வழியே நீ நுழைந்து சென்று
எந்தன் இதயத்தையும் அறுத்து விட்டாய்...
அன்பின் முகவரியில் காதல் மலருமென்று
சொந்த முகவரி நான் தொலைத்தேன்...
காதலென்றால் விலகும் கானலென்று
நீ பிரிந்ததும் புரிந்து கொண்டேன்...
குளிர் காற்றாய் வந்து
அனல் காற்றை தந்து
என் சுவாசத்தை ஏன் பறித்தாய்......
கண்மணியே......
வான்மழையும் சிந்தும் தேன்மழையும்
வாழ்வில் இனியில்லையடி...
மெய்யெழுத்தும் உயிரெழுத்தும்
சேர்ந்திடாதிங்குச் சண்டையும் போடுதடி...
சேர்ந்திருந்தால் பொருள் விளங்கியிருந்தால்
வாழ்வும் வானவில் வண்ணமடி...
ஊன்களெல்லாம் என்னுள் வனம்போல்
இன்று எரிந்து கருகுதடி...
இது அனையுமா... அணைக்குமா...
கொன்றிடும் நரகமடி...
உன் மௌனமும் பேசுகின்ற மொழிகளும்
எனைக் கொத்திடும் நாகமடி......
கண்மணியே......
பூங்குயிலே உன் முகம் பார்த்தால்
வரும் நினைவுகள் நீர்வடிக்கும்...
பூமகளே உனைத் தினம்பார்க்காது
என் தேகத்தில் தேள் கடிக்கும்...
இளந்தளிரே எனை விலகிநிற்க
எந்தன் வாலிபம் துடிதுடிக்குமம்...
வாசல்வரும் இளந்தென்றலின்று எனை தீண்டாது நோகடிக்கும்...
என் இதழ்களின் புன்னகையை
இன்று இழந்திருக்கேன்...
இந்த காதலில் வந்த காயங்கள்
தரும் வலியில் இறந்திடுவேன்......
கண்மணியே......