முழுநிலவாய் உன் நினைவுகள்

நீ என் அருகில் இருந்தால்
தேயும் பிறையும் எனக்கு வளர்பிறை
என்னை விட்டு தொலைவில் போனால்
வளரும் பிறையும் எனக்கு தேய்பிறை
மனதை பரிமாறும்
அந்திமாலை என்றும்
நம் காதலின் அழகான
மூன்றாம் பிறை
மூன்றாம் பிறை
காதலில் உதிக்கும்
நம் வாழ்க்கையின்
நண்பர் கூட்டம்
அற்புதமான வின்மீன் கூட்டம்
விண்மீன்கூட்டத்தில்
சிறகடிக்கும்
வால்நட்சத்திரம்
நம் காதல் காவியத்தின்
மறுவடிவம்
என் இருண்ட வானத்தில்
முழுநிலவாய் என்றும்
உன் நினைவுகள்
-ஜ.கு.பாலாஜி-