பூமியின் அனுபவங்கள்
*
நிஜங்களின் நிழல்
நீட்டிய கரங்களில்
பொய்மைக்கு
போஜனமில்லை!
*
கரையை தொட முடியாத
அலைகளுக்கு
நதியின் ஆறுதல்!
*
கடலோடு கரையும்
ஒரு துளி
எங்கோ ஜனித்திருக்கிறது!
*
ஒரு நதியின் பயணத்தில்
சிறு சிறு தங்கல்கள்
சில தடம் மாறல்கள்
பின் கூடுகைகள்.
*
பயணங்கள் முடிவதில்லை,
கடலில் சங்கமிக்கும் போதும்...
*