சேலம் வெண்ணெய் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

கண்போல எண்ணியே காத்திடும் ஆனைமுகன்
வெண்ணெய் விநாயகனை வேண்டியே - ஒண்மையாய்
நம்புவோர்க்கு வாழ்வில் நலமே வழங்கிட
நம்பிக்கை நல்கிடுவான் நம்பு! 1 *

ஒண்மை – மிகுதி, ஒழுங்கு, அறிவு

இடதுகையில் வெண்ணெய்க் கலயமும் வேழ
இடைசுற்றி நாகம் இணைந்தே - தடக்கையான்
காட்சி தருவான் கருணை மழைபொழிவான்
நீட்சியாய வன்தாள்நே சி! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-16, 10:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே