ஆன்மாவின் ராகம்

ஆன்மாவின் ராகம்

என் கண்ணன் உனை காணாமல்
என் ஜீவன் தேடுது உன்னை வா
என் மன்னன் உன்னை பாராமல்
என் ஜீவன் வாடுது வா
என் குரல் கேட்கும் தூரத்தில் நீ இல்லையோ
இல்லை என் குரல் கேட்டும் வர மனமில்லையோ
என் ஆன்மாவின் ராகம் உன்னை தொடவில்லையோ
தொட்டும் வரும் நிலையில் நீயில்லயோ
என் உயிர் உருகும் சத்தம் உன்னை எட்டவில்லையோ
இல்லை என் காதல் அது சுத்தம் இல்லையோ

by லதா ஸ்ரீனிவாஸ்

எழுதியவர் : லதா ஸ்ரீனிவாஸ் (2-Oct-16, 10:49 am)
சேர்த்தது : preme
Tanglish : aanmaavin raagam
பார்வை : 63

மேலே