கோவை வெள்ளை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
தூய்மையின் மெய்யான தூயவனாம் நன்மைதரு
வாய்மைமிகு வெள்ளை விநாயகன் - தாய்போலக்
காத்திடுவான்; நாமவனைக் காலமெலாம் நம்நெஞ்சில்
வைத்து வணங்குவோம்வா ரீர்! 1 *
வெள்ளை விநாயகன் தாயாக நம்மையெலாம்
பிள்ளையைப் போலவே காத்திடுவான்; - வெள்ளை
உளம்கொண்டே நம்குறைகள் உள்ளபடி தீர்ப்பான்;
இளகிமன் றாடு பணிந்து! 2 *