என் கவிதை

புன்னகை செய்த பூக்களெல்லாம் புன்னகை இழக்க
நான் பூ கொடுத்த மயிலின் புன்னகை ஓயவில்லை
சிவந்த ரோஜா மொட்டு
என் காதலை சொன்ன சொத்து .
செந்தாமரை என் தேசிய மலரானது
மனம் வீசும் மல்லி
தமிழ் வளர்த்த மதுரைக்கு சொந்தமானது
மாரிக்கொழுந்து வாசத்தோடும்
சூரியகாந்தியின் சிரிப்போடும்
அல்லியின் இதழோடும்
அன்பின் வழியோடும்
சித்தரிக்கும் எழுத்தோடும் சினம் கொண்டு எழுந்தது
என் கவிதை

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (2-Oct-16, 11:02 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : en kavithai
பார்வை : 291

மேலே