சுதந்திரம் தேடும் மனிதன்
உலகு எனும் இம் மாய
மேடையில் வாழ்வு எனும்
வட்டத்தில் மானிடன் எனும்
ஜீவன் உலா வருகின்றது.
உரிமை எனும் உன்னதத்தைப்
பெற்றிட சுதந்திரம் எனும்
சுகத்தைத் தேடி அலைகின்றது.
காலங்கள் கடந்தாலும்
மனித சுதந்திரத்தை பாதுகாப்பார்
யாருமில்லை. பணம் தேடும்
ஜீவன் பிறர் சுதந்திரம் சிந்திக்காமையே தவறாகும்
இந்நிலையில் உண்மையில்
சுதந்திரம் பெற்றுள்ளோமா
என்பதே விடை தெரியா
புதிராகும்